×

நாகர்கோவிலில் கண்ணாடி இல்லாமல் இயக்கப்படும் மினி பஸ்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பின்பக்க கண்ணாடி இல்லாமல் இயக்கப்படும் மினி பஸ் படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. குமரி மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் 200க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாகர்கோவில் அருகே உள்ள கிராமங்களை இணைத்து நகர பகுதிகளில் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கு போட்டியாக இயக்கப்படும் இந்த பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இதில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை மையமாக வைத்து பல்வேறு மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இவற்றில் நோயாளிகள், அவர்களை சார்ந்தவர்கள் அதிக அளவில் பயணிக்கின்றனர். இவ்வாறு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வடசேரியில் இருந்து இயக்கப்படுகின்ற மினி பஸ் ஒன்றில் பின்பக்கம் உள்ள 2 கண்ணாடிகளும் இல்லை.

இதனால் பயணிகள் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். இந்த மினி பஸ் படத்தை எடுத்த சமூக ஆர்வலர்கள் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். கண்ணாடிகள் இல்லாமல் இயக்கப்படுகின்ற இந்த மினி பஸ் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனவே வட்டார போக்குவரத்து துறை இதனை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.

The post நாகர்கோவிலில் கண்ணாடி இல்லாமல் இயக்கப்படும் மினி பஸ் appeared first on Dinakaran.

Tags : Nagarkov ,Nagarko ,Nagarkovo ,Kumari district ,Nakarkov ,
× RELATED கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை...